Monday, 19 September 2016

வீழ்வேனென்று நினைத்தாயோ?


இளந் தமிழ்ச் சிங்கங்காள்!
ஒன்றுபடுங்கள். ஒற்றுமையாக நாட்டின் சுதந்திர கீதத்தைப் பொழியுங்கள். முன்னேற்றப் பாதையில் நடவுங்கள். உங்களாலேயே நாட்டிற்கு விமோசனம். உங்கள் நாடே உங்கள் பொக்கிஷம். சாதி, சமய, மொழிப் பிரிவினை உமக்கு வேண்டாம். “எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று பாரதி அறைந்த மொழிகளையே உயிராக்கி கொள்ளுங்கள். உங்கள் சுதந்திரத்தைப் பெற்று உங்கள் மொழியைப் பேணுங்கள்.

“தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்”
எனப் பாரதி கூறுந் தொண்டை ஆற்றுவது உங்கள் கடமை.

“சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா”

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்குங் காணோம்”

“செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுத காதினிலே”
என்று பாரதியார் தமிழ்மொழிப்பற்றிக் கூறியவற்றை உணருங்கள். உணர்ந்தால் உங்களுக்குள் ஒற்றுமைமயுணர்ச்சியும், சுதந்திரப் பற்றும், மொழி ஆர்வமும் உண்டாகும்.

பண்டைத் தமிழனது உள்ளத்துதித்தது கருணை வெள்ளம். அதனை மறக்கப்படாது, சுதந்திரத்தை அடைந்து தமிழர் தலை நிமிர்ந்து நிற்பதற்கு வெற்றி வேண்டும். ஆனால்,
“வெற்றி என்பது கொலையல்ல
வெற்றியும் அதனால் நிலையல்ல”
என்னும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கரின் வாக்கை ஓர்ந்துணருங்கள்.

இளைஞர்களே!
‘நாம் அடிமைகள் அல்ல’ என்று கூறும் ஆண்மைதான் சுதந்திரம். கருணையைப் பின்பற்றியே உங்கள் கடமையைச் செய்யுங்கள்

No comments:

Post a Comment