செல்வ நிலையும் வாணிகமும்
இன்றைய உலகில் ஆதிக்க நாடுகள் தம்முட் பொருதுவதன் காரணத்தை ஆராய்கின் வாணிகத்தின் சிறப்பு தெற்றென விளங்கும். பண்டைத் தமிழ் மக்களுக்கு இப்பெருமை தெரிந்தே இருந்தது. அக்காலத் தமிழ் மக்கள் வணிகத்துறையில் மிக முன்னேற்றமடைந்திருந்தனர். நாட்டிற்கு மக்கள் செய்யும் உதவியில் வணிகர் செய்யும் உதவி முக்கியமானதாகும். நாட்டில் ஒரு இடத்தில் உண்டாகும் விளை பொருள்களை அப்பொருள் விளையாத மற்றோரிடத்திற்கு அனுப்பி, அங்குள்ள மக்களுக்கு அப்பபொருள்களை உதவி நாடு முழுமையும் வளமுண்டாக்கும் செயல் அவர்களைச் சார்ந்ததாகும். வணிகரைத் “தாழ்விலாச் செல்வர்” என்று திருவள்ளுவர் குறிக்கின்றார். சிறந்த நகரங்களில் இவர்கள் அரசர்களுக்கு அடுத்தபடியாக செல்வத்தில் சிறந்து விளங்கினார்கள். ஆரம்பத்தில் உலக மக்களுக்கு உதவியாகவே வாணிகம் நடைபெற்று வந்தது. பொருள் ஈட்டும் எண்ணம் அப்பொழுது அவர்களுக்கு உண்டாகவில்லை. நாடு முழுவதும் மக்கள் நலனுடன் வாழ வேண்டிய பண்டமாற்று முறையையே அக்கால வணிகர் பின்பற்றினர். வணிகர்களின் உண்மை உள்ளங்களையும் அவர்கள் நேர்மையையும் பட்டினப்பாலை யென்னும் நு}ல் அழகாக எடுத்துக் கூறுகிறது.
தரை வழியாகவும் கடல் வழியாகவும் அயல் நாடுகளோடு வாணிகம் செய்து வந்தனர் என்பதற்குச் சிலப்பதிகாரத்தில் காணும் உதாரணம் பலவாகும்.
“கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வா”
வாழ்ந்து வந்தார்கள் எனக் கூறப்படுவதால் கடல் மூலம் வாணிகம் பண்டு நடைபெற்றதென்பது வெள்ளிடை மலையாகின்றது.
வாணிகத்தில் சிறந்த மார்க்கமான கடல் வாணிகத்திலும் தமிழ் மக்கள் சிறந்து விளங்கினர். மேல் நாட்டினர் பலரும் இவர்களுடன் வியாபாரத் தொடர்புடையோராக இருந்திருக்கின்றனர். தமிழர் கடற் பிரயாணத்தில் நன்கு பயின்றிருந்தார்கள் என்பதற்கு அநேக உதாரணங்கள் இருக்கின்றன.
இந்து சமுத்;திரத்தில் தமிழர்களது மரக்கலங்களே பெரும்பாhலும் ஓடிக்கொண்டிருந்தன. நமது நாட்டிலேயே கடற்கரை நகரங்கள் வாணிப நோக்கமாகவே அமைக்கப்பட்டிருந்தன. ஈழம், காழகம், கடாரம், சீனம், அரபு, ஜவனம், எகிப்து முதலிய நாடுகளுடன் எம் முன்னோர் வாணிபத்தொடர்பு மாத்திரமன்றி கலைத்தொடர்புங் கொண்டிருந்தனர். இவ்வரலாறுகள் பழந்தமிழ் நு}ல்களில் மலிந்து கிடக்கின்றன. கநற்தொகை நு}ல்களில் தமிழ்நாட்டு குறிஞ்சி நிலங்கள் பற்றிக் கூறுமிடத்து ஆங்கு வைடூரியங்கள் அகப்படுவதாகக் குறிக்கப்பட்டுள்ளன. அத்தகைய வைடூரியங்கள் இங்கிருந்து மொஸப்பாத்தேமியா போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக சான்றுகள் இன்றும் உள்ளன.
வாணிகத்தின் பொருட்டு பலநாட்டு மக்களும் தமிழ் நாட்டில் குடியேறி வாழ்ந்து வந்தார்கள். இதனை இளங்கோவடிகள்,
“கலந்தரு திருவில் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந் துறையும் இலங்குநீ வரைப்பும்”
என்று கூறிப் போந்தார். இவ்வாறு வாழ்;ந்த அந்நியநாட்டு மக்கள் மரக்கலங்களுக்கு உதவியாக துறைமுகங்கள் தோறும் கலங்கரை விளக்கங்கள் அமைத்தனர். அவ்வத் துறைகளில் சேமித்து வைக்கப்பட்ட சரக்கு வகைகளைப் பகுத்து உணர்த்துவதற்குச் சிறுகொடிகள் ஆங்காங்கு நாட்டப்பெற்றிருந்தன எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பட்டினப்பாலை யென்னும் நு}லில் தமிழ் நாட்டில் இருந்த வாணிபப் பொருள்கள் பற்றிப் பரக்கக் காணப்படுகின்றன. ஓரிடத்தில்
“நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
காலில் வந்த கருங் கரி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துணவும் காழகத் து}க்கமும்”
எனக் கூறப்படுதலைக் காண்க.
கிறீஸ்துவிற்கு முன்னர் பல நு}ற்றாண்டுகளாக மேற்கு ஆசியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் கப்பல் மூலம் வியாபாரம் நடந்ததற்குப் பல சான்றுகள் உள்ளன. கி. மு. 4000 ஆண்டு வரையில் அமைக்கப்பட்ட சாலடியாரின் நகரமாகிய ஊர் என்னுமிடத்தின் அழிபாடுகளில், மலையாளக் கரைகளில் மாத்திரம் காணப்படும் தேக்கமரத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. தமிழர்கள் அதற்கும் பல நு}ற்றாண்டுகள் முன்னதாகவே வியாபாரத் துறையில் நன்கு பயின்றிருந்தார்கள் என்பது இதனால் விளங்கும்.
ஆடை வகைகளும் அவற்றிற்குரிய பலவகைச் சாதனங்களும் இந்நாட்டில் இருந்து பிறநாடுகட்குச் சென்றிருக்கின்றன. ஐரோப்பியாவிற்கு மஸ்லின் போன்ற பட்டு உடைவகைகள் ஊராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளனவென்று நு}ல்கள் குறிக்கின்றன. கிரேக்க நாட்டினரும் உரோம மக்களும் தமிழ்நாட்டு உடைகளையும் அணிகலன்களையும் அதிக விலை கொடுத்து வாங்கியதாகப் பல நு}ல்களிலும் கூறப்படுகிறது. அந்நிய நாட்டு நாணய வகைகள் புதைபொருள் ஆராய்ச்சியாளரால் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கி. மு. 1700இல் எகிப்து சென்ற ஜோசேப்பின் வரலாறு அக்கால எகிப்து, சீரியா முதலிய நாடுகளுடன் இந்தியாவின் வியாபாரத் தொடர்புகளைக் குறிக்கின்றது.
கி. மு. 17ம் நு}ற்றாண்டில் இந்தியாவிற்கும் மேற்கேயுள்ள நாடுகளிற்கும் வியாபாரத்தொடர்பு இருந்ததென்பதை எகிப்திய சித்திர எழுத்து நு}ல்களில் காணக் கிடக்கின்றது. கி. மு. 1462இல் முடிவெய்திய எகிப்திய 18ம் பரம்பரையிலுள்ள அரசரின் பிணங்கள் இந்திய மஸ்லின் துணிகளாற் சுற்றப்பட்டிருந்தன. ‘ஓபிர்’ என்பது தென்னிந்தியாவின் ‘உவரி;’ என்னும் துறைமுகம் எனக் கருதப்படுகிறது. கி. மு. 1000 ஆண்டளவில் சாலமன் என்னும் யூத அரசன் சந்தனக்கட்டைகள், குரங்குகள். மயில்கள் முதலியவற்றை ஒபிரினின்றும் பெற்றான். மேல் நாட்டிற்குச் சென்ற தமிழ் நாட்டுப் பொருள்கள் தங்களுடன் தங்களுக்குரிய தமிழ்ப் பெயரையுங் கொண்டு சென்றன. இந்தியாவினின்றும் பொன், பட்டு, முத்து வாசனைத் திரவயங்கள் ஆகிய பண்டங்கள் கிரேக்க நாட்டுக்குக் கொண்டு போகப்பட்டன. ஹோமர் என்னும் கிரேக்க கிவ இந்தியாவிலிருந்து கிடைக்கும் பொருள்களைப் பற்றிக் கூறியுள்ளார். முற்காலத்தில் தங்கம் இங்கிருந்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதியாகியதற்குப் போதிய சான்றுகள் உண்டு.
மயிற்றோகை, அரிசி, தந்தம் முதலியனவும் பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. தமிழ் மக்கள் கடல் வாணிபத் துறையில் சிறந்திருந்தார்கள் என்பது தொல்காப்பிய நு}லில் காணப்படும் சூத்திரங்களால் அறியலாகும். மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலியவற்றிலும் பார்க்கக் காணலாகும்.
தமிழகத்திலே கப்பல்களைச் செய்வதற்கென ஒரு சாரார் இருந்துள்ளனரென்று நு}ல்கள் தெரிவிக்கின்றன. கப்பலைக் குறிக்கும் பல பெயர்கள் தமிழ் நு}ல்களில் காணப்படுகின்றன. கடலைக் குறிக்கும் பல பதங்களும் காணப்படுகின்றன. புணை, பரிசல், கட்டு மரம், தோணி. திமில், ஓடம், படகு, அம்பி, வங்கம், கப்பல், நாவாய் முதலியன கடலில் உபயோகப்படுத்தப்பட்ட பல வகைக் கப்பல்களையும் குறிப்பனவாகும்.
தொண்டி, கொற்கை, காவிரிப்பூம்பட்டினம் என்னும் துறைமுக நகரங்களின் சரித்திரங்கள் விரிவாகக் கிடைத்துள்ளன. அவற்றில் பிறநாட்டு வாணிபத்தைப் பற்றிக் காணப்படுகின்றன. கி. மு. 8ம் நு}ற்றாண்டில் நடந்த வியாபாரத்தைப் பற்றிய ஆதாரங்கள் தெளிவாகக் கிடைத்துள்ளன. பாபிலோனியாவில் தைகிரஸ், யூபிரதஸ் நதிகள் சந்திக்குமிடத்திற்குச் சமீபத்தில் தமிழர்கள் குடியேறியிருந்தார்கள். ஆங்கு கிருட்டின பலதேவ வழிபாடுகள் இருந்தனவென்றும் அறியப்படுகிறது. அர்த்த சாஸ்திரம் செய்த கௌடலியர் வர்த்தகத்தில் சிறந்து விளங்கியது தமிழ் நாடேயென்ற கூறியுள்ளார். கி. மு. 20ம் ஆண்டில் பாண்டிய அரசனொருவன் அகஸ்தஸ்சீஸர் என்ற உரோம சக்கரவர்த்திக்குத் து}து அனுப்பினான். கிரேக்க போர் வீரர்கள் பாண்டியரின் கோட்டை வாயில்களைக் காவல் புரிந்தனர். இவ்வாறு அநேக வரலாறுகள் நு}ல்களில் காணப்படுகின்றன.
கிறிஸ்துவிற்குப் பல நு}ற்றாண்டுகட்கு முன்னர் இந்திய வியாபாரிகள் பர்மா வழியாகவும் அதன் தென்கரை வழியாகவும் சென்று காம்போதியா நாட்டில் வியாபாரத் தொடர்பை ஏற்படுத்தினர். கடல் தரை என்னும் இரு வழிகளாலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போக்குவரவு இருந்தது. கிறீஸ்து பிறப்பதற்கு முன்பும் தமிழர் பலதீவுகளுடனும் வியாபாரத் தொடர்பு உடையோராக இருந்துள்ளனர். பாலியென்னுந் தீவில் தமிழர் நாகரிகச் சின்னங்கள் காணப்படுகின்றன. ஜாவா, சுமத்திரா முதலிய தீவுப் பகுதிகளில் தமிழர்களது சமய நிலையங்கள் போன்றவை இன்றும் சிறப்புடன் விளங்குவதைக் காணலாம். இந்தோசீனம் போன்ற இடங்களில் தமிழர்களது சிற்ப வேலைகள் மிளிரும் கட்டிடங்கள் காணப்படுகின்றன.
உள்நாட்டு வாணிபமே ஆரம்பத்தில் நடந்து வந்துள்ளது. மக்கள் தம் வியாபாரப் பொருள்களை எருதுகளிலும் கழுதைகளிலும் ஏற்றிச் சென்று அப் பொருள்களை வேண்டுவோருக்குக் கொடுத்து அன்னாரிடமிருந்து தமக்கத் தேவையான பொருள்களைப் பெறுவர். பெரும்பாணாற்றில் இதுபற்றிக் காணலாகும். பழைய தமிழ் மக்கள் வாணிபத்திற்கு வேண்டிய சகல குணநலன்களும் அமையப்பெற்று விளங்கினர். தமிழ் நாட்டின் கடை வீதிகளின் சிறப்பே தனிச் சிறப்பாகும். பண்டைக் காவியங்களும் பிற நு}ல்களும் அச்சிறப்புக்களை நவில்கின்றன.
தமிழ் நாட்டு வாணிகர்கள் தமது வர்க்கத்துடனேயே தமது காலம் முழுவதையும் கழிக்கவில்லை. பொது மக்கள் சேவையையும் தமது நோக்காகக் கொண்டிருந்தனர். இவர்கள் தமது அரசர்களுக்கு பல வகைகளிலும் உதவி புரிந்துள்ளனர். முற்கால வாணிகர் சிறந்த அறிஞர்களாகவும் விளங்கினர். அன்னாரிடையே விளங்கிய மொழி தமிழாகும். அத் தனிமொழியின் சிறப்பை அவர்கள் உணர்ந்திருந்தனர். மொழிப் பெருமையே அவர்க்குப் போதியதாகும்.
No comments:
Post a Comment