மக்களும், வாழ்க்கையும்
பண்டைக் காலத்து வாழ்ந்து வந்த எம் முன்னோர் வாழ்க்கைபற்றி அறிய எம் உள்ளங்கள் கொந்தளிப்பது இயற்கை. பண்டை மக்கள் தமது வாழ்க்கைக்கு வகுத்த முறைகள் இன்றும் நின்று நிலவி வருகின்றன. நாகரிக உலகில் இருந்துவரும் இன்றைய வீட்டு அமைப்பு முறைகள் பண்டைத் தமிழ் மக்கள் காட்டிய வழியையே பின்பற்றியுள்ளன வென்பதை மறுக்க முடியாது. அந் நாட்களில் காற்றோட்டம் மிக்க தெருக்களை அமைத்து நகர அமைப்பில் தமக்கிருந்த பண்பட்ட அறிவை உலகுக்குக் காட்டினர். சுட்ட செங்கற்களையும், உலர்ந்த செங்கட்டிகளையும் வீடுகள் அமைப்பதற்குப் பயன்படுத்தயுள்ளனர். சில பகுதிகளில் பெருங் கற்பாறைகளை மலையையே புரட்டி விடுவது போன்று து}ண்கள் அமைத்து வீடுகள் கட்டினர். சில இடங்களில் மலைகளையே குடைந்து கட்டிடங்கள் அமைத்தனர். வீட்டுச் சுவர்கள், சாளரங்கள். வாயிற் படிகள் முதலியன ஒழுங்காக அமைக்கப்பட்டிருந்தன. அக்காலத்திய கொத்தர்கள் கட்டிட நிர்மாணத்திலே சிறந்தவர்கள் என்பதற்கு இன்றும் நிலவும் பாரிய வேலைப்பாடுகள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. அக்காலத்தில் அணி அணியாகவே வீடுகள் அமைக்கப்பட்டன. மாடி வீடுகள், பல வகைப்பட்ட பாரிய கட்டிடங்கள் தமிழ் நாட்டில் மிளிர்ந்தன.
இரண்டிற்கு மேற்பட்ட அடுக்கு மாடங்களைக் கொண்ட மாளிகைகள் பல்கிக் கிடந்தன. பெரிய கட்டிடங்களிற் பாரிய கூடங்கள், அகன்று நீண்ட தாழ்வாரங்கள், அகன்ற முற்றங்கள், சிறிய பெரிய வாயில்கள் முதலியன விசேட அமைப்புக்களாகும். படுக்கை அறைகள், நீராடும் அறைகள். மலங் கழிக்கும் ஒதுக்கிடங்கள் முதலியன நன்மாதிரி அமைக்கப்பெற்றிருந்தன. இவ்விதம் மக்கள் வீடுகளும் கட்டிடங்களும் திகழ்ந்தன. சித்திர வேலைப்பாடுகள் மல்கிக் கிடந்தன. அரசன் அரண்மனையோ கூறத் தரமன்று. அரண்மனை அமைப்புகள் பண்டைத் தமிழ் மன்னர்களின் சிறப்புக்களையே பன்மடங்கு பெருக்குவனவாக இருக்கின்றன. வீடுகள், பொதுக் கட்டிடங்கள், அரண்மனைகள், ஆலயங்கள் முதலியன மக்களின் நாகரிக முதிர்ச்சியை இன்னும் நமக்கு அறிவுறுத்துகின்றன.
நீர் மொள்ளக் கிணறுகள் பல வீட்டிற்கு ஒவ்வொன்றாக அமைக்கப்பட்டிருந்தன. அழகிய செய் குளங்கள் மக்கள் நீராட அமைக்கப்பட்டிருந்தன. பண்டை மக்கள் செயற்கைக் குளங்களையும், நவீன நீர்வீழ்ச்சி சாதனங்களையும் அக்காலத்தில் அமைத்திருந்தனர் என்பதற்கு அத்தாட்சிகள் கூறவேண்டிய அவசியமின்று. இவைகள் கண்கூடாகவுள்ளன. அக்காலத்தில் நீர் வசதிகள் தக்க சிறந்த முறையில் மக்களுக்குச் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.
தமிழ்நாட்டு மக்கள் தம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் பெற்றிருந்தனர். களிமண்ணாலும் மரத்தாலும், செம்பாலும், வெண்கலத்தாலும், மற்றும் உலோகங்களாலும் தமக்கு வேண்டிய பொருள்களைச் சேகரித்திருந்தனர். நன் முறையிற் செய்யப்பட்ட மட்பாண்டங்களே மக்கள் உபயோகத்தில் இருந்தன. பொன் வெள்ளிகளினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் செல்வர்களது மாளிகைகளிலே பல்கிக் கிடந்தன. அப்பாத்திரங்களின்மீது அழகிய ஓவீயங்களும் சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன. இன்றும் எம் இல்லங்களிலும் இத்தகைய பண்டை மக்களின் வீட்டுப் பொருள்களைப் போன்றவைகளைக் காணலாகும். வீடுகளிலும் பலவகைச் சிலைகளைச் செய்து வைப்பதுடன் எங்கு நோக்கினும் சிற்பக்கலையும், ஓவியமும் மிளிரும்படி செய்து வைத்தனர். பலவகை எந்திர சாதனங்களும் அன்னார் உபயோகத்தில் இருந்து வந்திருக்கின்றன. பீங்கான்கள் கூட அக்கால தமிழ் மக்களிடையே கையாளப்பட்டு வந்த பாத்திரங்களாக விளங்கின என்பதற்க ஆதாரங்கள் இருக்கின்றன. வீடுகளில் பல்வேறு வகைப்பட்ட விளக்குகள் உபயோகத்தில் இருந்திருக்கின்றன. விஷேட தினங்களுக்குப் புதுவித விளக்குகள் பாவிக்கப்பட்டன.
குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் பல இருந்தன. இன்றும் இருக்கின்றன. ஆனால் பண்டு எம் மக்களிடையே பரவியிருந்த விளையாட்டுப் பொருள்கள் இன்றையவற்றிலும் பன்மடங்கு சிறப்புடையன என்பதை மறுக்க முடியாது.
தமிழ் மக்கள் பொன்னாலும் மணியாலும் செய்த ஆபரணங்களைப் பூண்டனர். அக்காலத்தில் தமிழ் நாட்டில் செல்வம் கொழிந்தது. முத்துக்களும் பவளங்களும் இன்னும் பல கடல்படு திரவியங்களும் பொன்னும் மணியும் நகரங்களில் குவிந்து கிடந்தன. மக்களின் அணிகலன்களும் அளப்பரியன. சிலப்பதிகார ஆசிரியர் மாதவி பூண்ட அணிகலன்களைப்பற்றி அழகாக எடுத்துக் கூறுகின்றார். இதனால் தமிழ்நாட்டு அணிகலன்கள் தெளிவாகின்றன.
அக்காலத்திய யுத்தவீரர் ஈட்டிகள், உடைவாள்கள், கத்திகள் வேல்கள், அம்புகள் முதலியவற்றை உலோகங்களாற் செய்திருந்தனர். அக்காலத்தில் உலோகங்களாற் செய்யப்பட்ட ஆயுதங்கள், வீட்டுப்பொருள்கள், அணிகலன்கள் முதலியன தமிழ் நாட்டில் பல்கிக் கிடந்தனவென்பதில் ஐயமின்று.
அக்காலத்து மக்கள் இல்வாழ்க்கையைப் பெரிதும் விரும்பியிருந்தனர். இல்வாழ்க்கையில் வருவாய்க்கு ஏற்ப செலவையே தமிழ் மக்கள் செய்து வந்தனர். தமது செல்வத்தைத் தேடுவதற்கு அவர்கள் பல தொழிலையும் செய்து வந்தார்கள். இடங்களுக்கு ஏற்பப் பல தொழில்களையும் மக்கள் கையாண்டு வந்தனர். விவசாயம் மக்களால் கையாளப்பட்டது. விளைந்த தானியங்களைத் தாமும் உண்டு மிகுதியை அந்நிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தனர். தமிழ் மக்களின் உணவு வகைகளையோ அல்லது உடை முறைகளையோ அன்றி வாழ்க்கையிற் கையாண்ட பண்பாகுபாடுகளையோ கூறின் விரியும்.
இல்லறம், துறவறம் என்னும் இருவகை அறங்களும் நிலைத்திருந்ததாகத் தெரிகின்றது. இல்லறத்தை மேற்கொண்டோர்கள் பலவகைத் தானதருமங்களையும் முறையின் வண்ணம் செய்து வந்தனர். இல்லறத்தில் நல்லறங்கள் செய்வதற்குக் கணவனும் மனைவியும், கண்ணிரண்டும் ஒருபொருளையே காணுதல்போல, மனமொத்து நடத்துவதே முறை என்பது சிலப்பதிகாரத்தால் விளங்குகிறது. கண்ணகி தன் கணவனைப் பிரி;ந்த பின்னர் இல்லறத்தின் நல்லறங்களை இயற்றும் பெருமையைத் தான் இழந்ததாக கூறுகின்றனள். இதனால் கணவனும் மனைவியும் ஒத்தே இல்லற தருமத்தை நடத்தவேண்டு மென்பது பண்டைய மக்கள் கொள்கையெனத் தெளிவாகின்றது.
இல்லற வாழ்க்கையில் கணவன் இறப்பின் அவர் வாழ்க்கைத் துணையான மாதும் உயிர்துறக்கும் வழக்கம் தமிழ் மக்களிடையே இருந்து வந்தது. பாண்டிய அரசன் உயிர் துறந்ததும் அன்னவன் மனைவியும் உடன் உயிர் துறந்தனள் என்று தலையாய கற்பின் தன்மையை சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு காதலனுடன் உயிர்துறவாத மாதர்கள் கைம்மை நோன்பாகிய விரதங்களை அனுட்டிக்கவேண்டும். இவ்வழக்கு தமிழ் நாட்டில் இன்றும் இடையிடையே காணக்கூடியதாக இருக்கின்றது.
இல்வாழ்க்கையைத் துன்பமென்றறிந்த ஆண்களும் பெண்களும் துறவறத்தை மேற்கொண்டு வாழ்ந்தனர். பெண்கள் துறவறத்தை மேற்கொள்ளும் வழக்கம் அந்நாளில் இருந்தது. சிலப்பதிகாரத்தில் கவந்தி, மாதவி, மணிமேகலை இவர்களின் துறவு இதற்கு உதாரணமாகும். ஆக்கலும் அழித்தலும் துறவறத்தை மேற்கொண்டிருந்தாரிடம் விளங்கியதென நு}ல்கள் கூறும்.
ஒரு சமுதாயத்தின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது முயற்சி;. முயற்சி மூலம் தொழில், தொழில்களைச் செய்வதால் தமக்கும் மற்றையோருக்கும் உதவி செய்து கொள்ளுதல். இப்படியே பரஸ்பர உதவி ஒத்தாசைகளுடன் வாழ்ந்து வந்தனர். தமிழ் மக்கள் . தமிழர்கள் வாழ்க்கையில் கல்வி, முயற்சி, தொழில், வாணிபம், ஒற்றுமை, கடவுட் கொள்கை முதலியவை விசேட அம்ஸங்களாகும். அவர்களது நகர அமைப்புகளும் ஆட்சி முறைகளும் அவர்கள் வாழ்க்கையில் அத்தியாவசியமான வைகளாகும். அக்கால அரசர்கள் நடத்திய போர்த்திறன் இன்றைய தமிழன் உள்ளத்தில் இல்லை. அக்காலத் தமிழ் மக்களின் வீரம் மறைந்துவிட்டது. பெரும்பாலான தமிழ் மக்கள் உணர்ச்சி அற்றவர்களாக இருக்கிறார்கள். அன்று உலகின் உன்னத வணிகர்களாக கடல் கடந்து வர்த்தகம் செய்த மக்கள் இன்று அடிமைகளாக கடல் கடந்து வர்த்தகம் செய்த மக்கள் இன்று அடிமைகளாக வளாவிருக்கிறார்கள். அவர்கள் மொழி உருக் குன்றியும் குன்றலாமலும் இருக்கின்றது. மறுமலர்ச்சி இயக்கத்தினரும், பண்டைக் கொள்கையினரும் தம்முட் பொருதுகின்றனர். அடிமைத் தளையை அகற்ற ஆற்றலற்றவர்கள் தம்முட் பொருது பயன் உண்டா? என்ன? மக்கள் உன்னத வாழ்க்கையும் இன்றைய தமிழர் நிலையும் என்ன? மக்கள் உன்னத வாழ்க்கைக்கும், நாட்டின் சிறப்பிற்கும் அரசாட்சியே இன்றியமையாதது.
No comments:
Post a Comment