Monday, 19 September 2016

ஆதித்தமிழ் வரலாறு -8

நாட்டின் கலைச் சிறப்பு
ஒரு நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சிக்கு முக்கியமானது கலைகளேயாகும். கலைகளே உயிரறிவின் செய்கை. கலைகளாகிய உயிர் உடம்பில் ஊசலாடும் பொழுதுதான் நாடாய உடம்பு நலனுடன் வாழ முடியும். கலைஞர்களும் தொழிலாயர்களுந்தான் நாட்டினைச் செல்வம் கொழிக்கச் செய்ய வல்லவர்கள்;. தமிழ் நாட்டில் பண்டைக் காலத்தில் ஐந்நிலப் பிரிவுகளைக் கொண்டே மக்கள் வகுக்கப்பட்;டிருந்தனர். பின்னர் ஏற்பட்ட கலைவளர்ச்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுதான் இன்றைய சாதிப் பிரிவினை. தனித்தனி இடங்கள் ஒவ்வொரு சாகியத்தாருக்கும் வகுக்கப்பட்டிருந்தது. கலைகளின் உணர்ச்சி தமிழ் மக்கள் இதயத்தில் ஊறியிருந்தன.

அறிவினால் அறியும் கலைகளை அறிவுக்கலைகள் என்றும், அறிவினால் அறிந்து உடம்பு முயற்சியினால் தொழில்கள் செய்துகொள்ளத்தக்கவற்றை உடம்புக் கலைகள் என்றும் பிரிப்பர். உணர்வுக் கலை, பொருட் கலை எனப்படுவனவும் அவைகளே. பொருட்கலையை மெய்யுணர்வுக் கலை, இன்பவுணர்வுக் கலை என்றும் பகுப்பர். கலைகளை இன்னும் நுணுகி ஆராயப்புகின் இன்னும் பல பிரிவுகளாகப் பகுக்க முடியும்.

பண்டைக்காலத்தல் மெய்யுணர்வுக் கலையுள் சமய தத்துவ சாஸ்திரங்களை அடக்கியும், இன்பவுணர்வுக் கலைக்குள் ஓவியம், சிற்பம் போன்றவற்றை அடக்கியும், வான நு}ல், கோள் நு}ல் போன்றவற்றையும், அரசியற் கலை, நாடகக் கலை போன்ற பல கலைகளையும் கையாண்டுள்ளனர் என்றும் நு}ல்கள் கூறுகின்றன. தமிழ் உலகம் கலைவளர்ச்சியில் தனக்கு ஈடிணையற்று விளங்கிய வகைகளை அன்று தமிழ் மக்கள் கையாண்டிருந்தனர் என்பது வெளிப்படையாகும். பண்டு தொட்டுப் பின்வருவனவற்றை முற்கூட்டியுரைக்கும் ‘பஞ்சாங்கம்’ போன்ற சாஸ்திர நு}ல்களை நாகரிகம் பழுத்த நவ உலகில் காண முடியுமா? அதற்கு ஈடு இணையுள்ள சாஸ்திர நு}ல்களை அந்நிய பாஷையில் காட்ட முடியுமா?

உலகின் உன்னத மெய்யுணர்ச்சிக் கலைகளைத் தமிழ் மக்கள் அளித்துள்ளனர். சைவசமயத்தின் ஒவ்வொரு தத்துவங்களையும் படிப்படியாகப் பிரித்து நோக்கின் அதன் உண்மையை அறியலாயும். கல்வியறிவற்ற பாமரன் முதல் கல்வியில் மேம்பட்டுள்ள பெரியோர் ஈறாக உள்ளாரது அறிவிற்கெட்டும் வகையில் சைவம் வகுக்கப்பட்டுள்ளது. உலக உற்பத்திக்கு இடமாக இருந்த கடல் கொண்ட தமிழ்; நாட்டில் இருந்து உலகம் முழுவதும் பரவிய மக்கள் பல சாகியத்தாராக மாறி வேற்ற மொழிகளைப் பேசிப் புறச் சமயங்களைக் கைக்கொண்டனர். எச் சமயத்தினை ஆழ்ந்து நோக்கினும் சைவத்தின் தொடர்பைக் காணலாகும். புத்த மதமோ, கிறிஸ்தவ மதமோ, இஸ்லாமிய மதமோ போதிக்கும் சகல தத்துவங்களும் சைவத்தில் பொதிந்து கிடக்கின்றன. எச் சமயத்தை நோக்கினும் தமிழ் மக்களது சமய நிலையையே கடைப்பிடித்துள்ளதைக் காணலாகும். அக்காலத்தில் சமயக்கலை உன்னத நிலையில் இருந்ததென்பதற்கு இன்றைய தமிழ் உலகில் பல சான்றுகளைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

சமய தத்துவார்த்தங்களுடன் சிற்பம், சித்திரம், ஓவியம் முதலியன இடம்பெறுகின்றன. ஆலயங்களைச் சிருஷ்டித்த தமிழன் இக் கலைகளையும் உலகறியச் செய்துள்ளான். தமிழ் நாட்டில் காலத்திற்குக் காலம் இவ்வகைக் கலைகளில் நடந்த மாற்றங்களை இன்றும் நாம் காணலாம். பண்டைய தமிழ் சிற்பாசாரிகளுக்கு ஈடாக இன்று உலகத்தின் எப் பகுதிகளிலும் காண முடியாது.

உலக மக்களுக்கு வானநு}ல், கோள் நு}ல் முதலியவைப்பற்றி வழிகாட்டி விட்டவர் தமிழ் மக்கள்தான் என்பதை மறுக்கமுடியாது. வீடு அமைப்புகள் இராசிகளின் நிலை கொண்டே கணிக்கப்பட்டு வந்தன. சமீப காலங்களில் சிந்து வெளியில் புதைபொருள் ஆராய்ச்சியாளர் நடத்திய சோதனையின்பின் அங்கு வாழ்ந்தோர் தமிழ் மக்களேயென்றும், அவர்கள் வான நு}ல் முதலியவற்றில் சிறந்து விளங்கினர் என்றும் கூறப்படுகிறது. அங்கு வசித்த மக்கள் நாகரிகம் கி. மு. 5610 ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்று ஹொஸ் பாதிரியார் தமது நு}ல்களிற் கூறியுள்ளார்.

அக்காலத் தமிழ் மக்களிடையே கணித சாஸ்திரம், தர்க்க சாஸ்திரம், தனுர் சாஸ்திரம், அர்த்தசாஸ்திரம், பரத சாஸ்திரம் முதலிய நு}ல்களும், யுத்த நு}லகள், நீதி ஒழுக்க நு}ல்கள், சட்ட நு}ல்கள், வாழ்க்கை விளக்க நு}ல்கள் முதலியனவும் பல்கிக் கிடந்தன. மக்கள் ஒவ்வொரு வழியிலும் சிறந்து விளங்கினார்கள். இவற்றினைப் பண்டைய சங்க நு}ல்கள் அழகாக எழுத்துக் காட்டுகின்றன.

மருத்துவக் கலை மிகவும் உன்னத ஸ்தானத்தில் இருந்துள்ளது. ஆயுள்வேத மருத்துவக்கலை தமிழ் மக்களாலேயே ஆரம்பிக்கப்பட்டதென்று திட்டமாகக் கூறப்பட்டுள்ளது. இன்றைக்கு 25000 வருடங்களுக்கு முன்பிருந்தவராகக் கருதப்படும் விசுவாமித்திரர் “வியாதியைக் குணப்படுத்தும் பாக்கியத்தை விட வேறு சிறந்த பேறு எதுவுமில்லை” என்று கூறியுள்ளார். கி;. மு. 600 வருடங்களுக்கு முன்னரே தமிழ் நாட்டில் சத்திர சிகிச்சை உன்னத நிலையில் இருந்தது. பண்டைக் காலத்தில் சத்திர சிகிச்சை செய்வதற்கு சம்மோகினி என்னும் மயக்க மருந்தை உபயோகித்தனர். இஃது ஒரு பகற்காலம் வரைக்கும் அபாயம் செய்யாது என்றும் கூறப்படுகிறது. வேண்டியபோது சஞ்சீவினி என்னும் மருந்தினைப் பிரயோகித்தல் சம்மோகினி என்னும் மயக்க மருந்தின் அதிகாரம் முழுமையும் நீங்கி அறிவுதயமாகும். இக்காலம் “குளோர பாரம்” என மேலை நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிது அபாயத்தை விளைவிக்கும். ஆனால் தமிழ் நாட்டு சம்மோகினி மருந்து அவ்விதமன்று. சஞ்சீவினி மருந்திற்கு ஈடாக மேலை நாட்டினரிடம் ஒருவித மருந்தும் இல்லை. சத்திர வைத்திய உபயோகத்திற்காகத் தமிழ் நாட்டில் 420 வகைக் கருவிகள் கையாளப்பட்டனவென்று நு}ல்கள் கூறும்.

மேல்நாட்டினர் பலர் கிரேக்க நாடே மருத்துவக் கலைக்கு உற்பத்தி ஸ்தானம் என்று கூறிவந்த போதிலும் அதன் உண்மை அறிவான் வேண்டி உழைத்த அறிஞர் பலருண்டு. ஓயிஸ் இ ராயில் ,இ மாக்டனல் ,
இ கோல்ப் ரூக், இ கன்னிங்காம்  முதலியோர் “இவ்வுலகில் வைத்தியம் முதன் முதல் இந்தியாவிலேயே பிறந்தது கிரேக்கர்களும், அராபியர்களும், சீனர்களும் இந்தியாவல் இருந்து இந்தச் சாஸ்திரங்களைக் கற்றுக்கொண்டனர். பின்னரே மறு நாடுகளும் இதனைக் கற்றுக்கொண்டன” என்று தங்கள் புத்தகங்களில் நிரூபித்துள்ளனர். ஆகவே தமிழ்ப் பெருநாடு மக்கள் உற்பத்திக்கு மாத்திரமன்றி அவர்களை ஆரோக்கிய மக்களாக வாழச் செய்யும் வைத்திய கலைக்கும் மூலஸ்தானமாக இருந்திருக்கின்ற தென்பது வெள்ளிடை மலையாகும்.

இவற்றினை விட இன்றைய உலகில் மிளிரும் நவீன சயன்ஸ் முறைகளை அக்காலத்தில் தமிழ் மக்கள் தம்முள் வழங்கி வந்துள்ளனர். இக் காலம் விஞ்ஞான சாஸ்திரத்தில் குறிக்கப்பட்டுள்ள மூலப்பொருள்களை அக் காலத்தல் தமிழ் மக்கள் ஐந்து பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விட்டனர். இப்படியே ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராயப்புகின் உண்மை புலப்படும். பண்டைக்காலம் முதல் தமிழ் மக்களிடையே வழங்கி வரப்பட்ட இசைக் கருவிகள் சாஸ்திர முறைப்படியே செய்யப்பட்டுள்ளன. போர்க் கருவிகளைப் பார்த்தால் ஆங்கும் அப்படியே, தானாக இயங்கும் பலவகைப் பொறிகளைப் பண்டைப் போர்களில் மக்கள் உபயோகித்து வந்துள்ளனர். இவைகளெல்லாம் ‘சயன்ஸ்’ என்று கூறுப்படும் சாஸ்திர முறைக்குள் அடங்கியவைகளேயாகும். ‘இச் சயன்ஸ் முறைகள் அக்காலத்தில் இல்லை. நவீன நாகரிக சாதியினர்தான் கண்டுபிடித்துள்ளனர்’ என வாய்ப்பறை சாற்றுவோருமுண்டு. பண்டு மேலைநாட்டு நாகரிக வாசிகள் மிருக வாழ்க்கை நடத்திய காலத்தில் தமிழ் மக்கள் உன்னத நிலையில் இருந்துள்ளனர் என்பதையும் இச் சயன்ஸ் முறைகள் அக்காலத் தமிழரிடையே இருந்ததென்பதையும் இன்றைய மேலை நாட்டினரே ஏற்றுக்கொள்கின்றனர். வேறு என்ன வேண்டும்?

பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் அக்கால நிகழ்ச்சிகளையும் ஆராய்ந்து பார்க்கின் உண்மை வெளிப்படாமற் போகாது. தமிழ் மொழியில் அகத்துடனும் புறத்துடனும் சம்பந்தமான நு}ல்கள் பல இருக்கின்றன. இவைகளை நாம் அறிய விரும்பின் தமிழை வளர்த்த முச் சங்கங்கள்பற்றி அறிய வேண்டும்;. முச் சங்கங்களை நிறுவி அதன் வழி வளர்த்த செந்தமிழ் குன்றாப் புகழுடைத்து.


No comments:

Post a Comment