ஆட்சியும் பாதுகாப்பும்
நாட்டின் உன்னத நிலைக்கு அதனை வழிநடத்தும் அரசாட்சியே இன்றியமையாதது. இடையனற்ற ஆட்டு மந்தை எங்ஙனமுருக்கப்படும்? நாட்டிற்கு அரசன் தான் வழிகாட்டி. அவனே அந் நாட்டிற்குப் பாதுகாவலன். மக்களை ஆட்சி செய்து நீதி, ஒழுக்கம், ஒற்றுமை முதலியவற்றை நிலை நாட்டுபவனும் அவனே. நகரம் சிறந்த முறையில் அமைக்கப்படவேண்டும். அப்பொழுது தான் மக்கள் சிறப்புடன் வாழ முடியும். அரசன் தனது ஆட்சியை சிறப்பாக நடத்தச் சிறந்த நகர அமைப்பு இன்றியமையாதது.
மக்கள் அறிவு முதிரமுதிர ஆற்றோரங்களில் நகரங்களை அமைத்தனர். மரக்கலங்களின் போக்குவரத்து கருதியே முதலில் நகரங்கள் ஆற்றோரங்களில் அமைக்கப்பட்டன. பண்டை நாளில் வாணிபத்தில் புகழ்பெற்ற தமிழ் மக்கள் தமது செல்வங்களை அந்நிய நாடுகளில் இருந்து சேகரிப்பதற்காகவே இம்முறையைக் கையாண்டனர் என்பது தெளிவாகின்றது. ஆற்றின் கரைகளிலேயுள்ள பரந்த வெளிகளிலேயே நகரங்கள் நிருமாணிக்கப்பட்டன. நகரங்களின் வீதிகளின் அமைப்பு அந்நகரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவனவாகும். காற்று வசதிகள் நோக்கியே வீதிகள் பெரும்பாலும் அமைக்கப்பட்டன. வீதிகள் மருங்கிலே வானை அளாவும் மாடமாளிகைகள் விளங்கின. வீதிகளின் கரையோரங்களில் கால்வாய் அமைப்புகள் சிறந்த முறையில் இருந்தன. இக்கால்வாய்கள் மூலம் சாக்கடை நீரும், மறை காலத்தில் வெள்ளமும் கழிக்கப்;படும். பெரும்பாலும் கால்வாய்கள் மேற்பாகம் மூடப்பெற்றிருக்கும். பண்டைத்தமிழ்மக்களிடையே நிலவி வந்த கட்டிட நிர்மாண வேலைகளை ஒரு தனி அம்ஸமாகும். கட்டிட நிர்மாணம் ஒரு பரந்த சாஸ்திரமihகும். நகரம் கோட்டங்களாகவோ அன்றி பகுதிகளாகவோ பிரிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு அமைக்கப்பட்ட நகரங்களில் இருந்துதான் மன்னர் தம் பிரஜைகள்மீது ஆட்சி செலுத்தி வந்தனர். நாகரிகத்தில் மிகுத்துள்ள மேலை நாடுகளிலும் காணற்கரிய சுகாதார முறைகளை அக்காலத் தமிழ் மக்கள் அனுஷ்டித்தனர்;. ஒழுங்கு முறையும் கட்டுப்பாடுகளும் மக்களாகவே வகுத்துக் கொண்டவைகளாகும். பூம்பொழில்கள் ஒவ்வொரு நகரங்களிலும் பல இருந்தன. பண்டைத் தமிழ்நாட்டு நகரங்களின் அமைப்பே தனிச் சிறப்புப் பொருந்தியவைகளாகும். நீண்ட அழகிய தெருக்களும், உயர்ந்த மாடமாளிகைகளும் இருந்தன. நாடுகளில் சுகாதார முறைகளை அனுட்டித்து வந்தது மாத்திரமன்றி, நகரங்களின் பல பாகங்களிலும் காவற் கூடங்கள் இருந்தன என்பதும் அவற்றைக் கொண்டு நகரத்தைப் பாதுகாத்த முறைகளும் தெளிவாக நு}ல்களில் காணப்படுகி;ன்றன.
நாட்டிற்கு வேண்டிய கல்வி, தொழில், நலனோம்பல் முதலிய பொது விஷயங்களில் மக்களை வழிபடுத்தவும் பகைவர், கள்வர் முதலியோரிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் இன்னும் இவைபோன்ற பிறவற்றைச் செய்வதற்கும் நல்ல அரசையே அக்கால மக்கள் அமைத்திருந்தனர். அன்றைய தமிழ் மக்கள் இவற்றை உணர்ந்து அதன்வழி நடந்திருத்தலினாலேயே தமிழ் நாகரிகமும் அரசியல் ஆதிக்கமும் உயர்ந்த நிலையில் இருந்தது எனலாம். குடிமக்களுக்காகவே அரசாட்சியென்பதை பண்டை மன்னர்கள் காட்டி நடந்துள்ளனர். இன்றைய உலகத்தில் இருப்பது போன்று அதிகார ஆட்சியின் சுரண்டலுக்காக குடிமக்கள் வாழவேண்டுமென்ற கொள்கை அவர்களிடையே நிலவவில்லை. ஆட்சியைச் செவ்வனே நடாத்துவதற்கு உதவியாக ஐம்பெருங்குழு எண்பேராயம் மிகவும் துணைபுரிந்துள்ளன. இவைகள் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய மன்றங்களேயாகும். குடிமக்களின் சார்பான கருத்துக்களை இம்மன்றங்களிலுள்ளோர் அரசர்க்கு எடுத்துக்யுகூறுவர். அரசரும் அன்னாரின் அறிவுரைவழியே நடப்பர். நல்லமைச்சர், படைத்தலைவர், காவற்றலைவர். து}துவர், தற்றர் முதலியோரெல்லாம் இப்பாகுபாடுகளில் உள்ளோராகும். நீதிக்கு மாறான எக்காரியங்களையும் நிறைவேற விடாது தடுக்க மன்னன் முயற்சியெடுத்துக் கொள்வான். மன்னன் பிறழும் நேரத்தில் மதி மந்திரிகள் பக்கத்துணையாக நின்று உயர்வழி காட்டுவர்.
பழைய காலத்தில் தமிழ்நாட்டை ஆண்டுவந்த அரசர்கள் நீதியைக் கண்ணுங் கருத்துமாகப் போற்றினார்கள் என்பது சிலப்பதிகாரத்தில் இனிது விளங்குகின்றது. அரசர்கள் குடிகளின் நலத்தையே நலம்போற் பேணி வந்தனர்.
சோழ நாட்டு மன்னரின் நீதியான ஆட்சியை சிலப்பதிகார ஆசிரியர் கண்ணகி வாயலாகக் கூறுகின்றார்.
“வாயிற் கடைமணி நடு நா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுட
தான் தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர் புகார் என்பதியே”
சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் மனுநீதி கண்ட சோழனைப்பற்றிக் கூறுமிடத்து,
“ஒருமைந்தன் தன் குலத்துக்குள்ளான் என்பதும் உணரான்
தரமந்தன் வழிசசெல்கை கடனென்று தன்மைந்தன்
மருமந்தன் தேராழி உற ஊர்ந்தான மனுவேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோ மற்றெளிதோ தான்”
என்று தெரிவிக்கின்றார். இன்னும் சிபிச் சக்கரவர்த்தியின் நீதியை சிலப்பதிகார ஆசிரியர், பின்வருமாறு கூறுகின்றார்.
“குருநடைப் புறவின் நெடுந்துயர் தீர
வெரிதரு பருந்தின் இடும்பை நீங்க
அரிந்து உடம்பிட்டோன் அறந்தரு கோனும்
திரிந்து வேறாகும் காலமும் உண்டோ”
பாண்டி நாட்டை ஆண்டுவந்த மன்னர்கள் நீதியின் பொருட்டு அரிய செயல்கள் பல புரிந்துள்ளனர். பொற்கைப் பாண்டியன் சரிதையை மதுரைமா தெய்வம் கண்ணகிக்கு கூறுவதாக ஆசிரியர் வர்ணிக்குமிடத்தில்,
“நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று
வச்சிரத்தடக்கை அமரர் கோமான்
உச்சிப் பொன்முடி ஒளிவனை உடைத்தகை
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து
இறைக் குடிப்பிறந் தோர்க்கு இழுக்கம் இன்மை”
என்று பாண்டியன் செங்கோண்மையைப் பாராட்டுகின்றார். தட்டானின் சொல்லைக்கேட்டு கோவலனை ‘கள்வன்’ எனக் கொலை செய்த பாண்டியன் கண்ணகியால் உண்மை அறிந்தான். தன் நீதி பிழைத்தது என மயங்கிச் சிங்காசனத்திருந்து வீழ்ந்து மாண்டான். அதனைச் சிலப்பதிகார ஆசிரியர்.
“மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் - வையைக்கோன்
கண்டளவே தோற்றான், அக்காரிகை தன் சொற்செவியின்
உண்டளவே தோற்றான் உயிர்”
என்று அழகிய வெண்பாவாற் கூறுகின்றார். நீதி தோற்ற பாண்டியன் நீதிக்காக உயிர் கொடுத்தான் எனக் கேள்வியுற்ற சேரமன்னன் பாண்டியனின் நீதியைப் புகழ்ந்துரைத்தான். சிலப்பதிகார ஆசிரியர் அதனைச் சேர மன்னன் வாயிலாகக் கூறுகின்;றார்.
“எம்மோரென்ன வேந்தர்க்கு இற்றெனச்
செம்மையின் இகழ்ந்தசொல் செவிப்புலம் படாமுன்
உயிர்ப்பதிப் பெயர்ந்தமை உறுக ஈங்கென
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோலாக்கியது”
இறுதியில் சேரன் செங்குட்டுவனுக்கு கண்ணகித் தெய்வம் காட்சி கொடுத்தபொழுது,
“தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன் கோயில்
நல்விருந்தாயினன், நானவன் தன்மகன்”
என்று கூறியருளியதால் பாண்டியன் நீதி தவறிய மன்னன் அல்லன் என்பது தெளிவாகின்றது.
சேரமன்னர்களும் நீதி வழுவாது ஒழுக்க நெறியுடன் மக்களை ஆட்சி செய்து வந்தனர். பண்டை நு}ல்கள் இவர்கள் ஆட்சி முறையினை உலகிற்கு எடுத்துக் காட்டா நிற்கின்றன.
அக்கால அரசர் எக்கருமத்தைச் செய்யினும் அறிவால் மிக்க அமைச்சர்களையும் மற்றும் அறிவாளர்களையும் கலந்தே செய்வர். பண்டைய அரச சபைகளில் காலக் கணிதர்களும், து}துவரும், சேனைத்தலைவர்களும், ஒற்றர்களும் இருப்பார்கள் எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இன்றைய உலகில் இருப்பது போன்று பண்டைத் தமிழ் உலகில் இருப்பது போன்மறு பண்டைத் தமிழ் உலகில் ஒற்றர்படை ஒவ்வொரு நாட்டினரிடமும் இருந்தது என்பது நு}ல்கள் வாயிலாக அறியக்கூடியதாக இருக்கின்றது. சிந்தாமணிச் செய்யுளொன்று பழைய அரசர்கள் எவ்விதம் ஒற்றர்கள் மூலம் விஷயங்களைக் கிரகித்தார்கள் எனக் காட்டுகின்றது.
“ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும்
கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலும்
சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் சூதரோ
கொற்றம் கொள்குறிக் கொற்றவர்க் கென்பவே”
சிலப்பதிகாரத்தில் பொதிந்துள்ள மூன்று கொள்கைகளிலும்; முதன்மையாக அரச நீதியையே எடுத்துக் கூறுகின்றார் ஆசிரியர். அரசியலில் இருந்து வழுவும் மன்னர்களை அறக்கடவுள் தண்டிப்பாரென்று கூறப்படுகிறது. சோழ நாட்டில் பாவைமன்றமென ஒன்று இருந்ததாகவும் அந்நாட்டு மன்னர் நீதி தவறி நடந்தால் அல்லது மக்கள் நீதி தவறினால் உடனே அப்பாவை மன்றத்திலுள்ள பாவையின் இரு கண்களாலும் கண்ணீர் வடியும் எனக் கூறுப்படுகிறது. இதனை,
“அரசகோல் கோடினும் அறங்கூற வையத்து
உரைநு}ல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நலிலாது நவைநீர் உகுத்து
பாவை நின்றழும் பாவை மன்றமும்”
என சிலப்பதிகார ஆசிரியர் எடுத்துக் கூறுகின்றார். பண்டைத் தமிழகத்தில் நீதியொழுக்கம் தலை சிறந்து இருந்ததென்பது வெள்ளிடை மலையாகக் காணக்கிடக்கின்றது.
நாட்டை வளம்படுத்தி, மக்கள் நிலையையுயர்த்தி, கல்வி தொழில் முதலியவற்றில் மக்களை ஊக்கமும் உணர்ச்சியும் கொள்ளச் செய்தலே மன்னனின் முக்கிய கடமையாகும்.
“மன்னுயிர்த்தே மலர்தலையுகம்”
என்னும் கூற்றுப்படி நாட்டிற்கு மன்னன் முக்கியமானவனாகின்றான். அக்கால மன்னர்கள் தமிழ்ச் சங்கங்களை அமைத்து கல்வியை ஆதரித்து வந்தனர். மன்னர் அவைகளில் புலவ சிகாமணிகள் நிறைந்திருந்தனர். அரிய பெரிய நு}ல்கள் பல அக்காலத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்டன. அக்காலத் தமிழ் மக்கள் அறிஞர்களையும் புலவர்களையும் ஆதரித்ததினாலேயே அரிய நு}ல்கள் பல்கிப் பெருகின. மக்களுக்காக அநேக பூங்காக்கள் ஆங்காங்கு அமைக்கப்பெற்றிருந்தன. மாலை நேரங்களை உல்லாசமாக மக்கள் கழிக்க களியாட்ட சாலைகள் இடையிடையே இலங்கின.
மக்களைப்போர் என்னும் அரக்கனிடமிருந்து காப்பாற்ற அன்றைய மக்கள் கையாண்ட முறைகள் விசித்திரமானவைகளாகும். அந்நிய நாட்டவரின் படையெழுச்சிகளிலிருந்தும், பகையரசர்களின் கலகங்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க அரசர்கள் பெரிதும் முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். அக்காலத்தில் நடந்த போருக்குரிய காரணங்கள் மிகமிக விசித்திரமானவைகளாக இருக்கும். இன்றைய காலத்தைப் போன்று வர்த்தக நோக்குக் கருதி யுத்தம் செய்யவோ அன்றி ஒருநாட்டை இன்னொரு நாட்டுடன் து}ண்டி விடவோ மக்கள் முயற்சிக்கவில்லை.
அக்கால அரசர்கள் நல்ல வீரர்களாகவும் யூகசாலிகளாகவும் இருந்தார்கள். போர்க்கலைகளை உரிய முறைப்படி பயின்றிருந்தனர். தமது குடிமக்களைப் பகைவர் அடக்கு முறைகளில் இருந்து காப்பாற்றுவதற்கு அன்னார் பல வழிவகைகளைக் கையாண்டனர். அவர்கள் கையாண்ட போர்க் கருவிகள் மிகப்பல. நகரத்தின் வெளிப்புறம் இருந்து கோட்டையி;ன உள்ளிடம் வரையில் பலத்த காவல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இயற்கையே பலவிடங்களில் தக்க அரண்களாக உதவின. செயற்கைக் கோட்டைகள் ஒவ்வொரு நாட்டிலும் பல இருக்கும். கோட்டைகளின் அமைப்புகள் பகைவரைத் திண்டாட வைக்குந் தன்மையனவாக விளங்கின. கோட்டைச் சுவர்களின் உச்சியில் பலவகை எந்திரப்பொறிகளும் வைக்கப்பட்டிருக்கும். சிலப்பதிகாரம் புறநானு}று போன்ற நு}ல்களில்; அக்கால ஆயுதங்கள் பற்றியும் கோட்டை அரண்கள் பற்றியும் காணலாகும். போர்முறைகளுக்காக இங்ஙனம் வசதிகள் செய்யப்பட்ட போதிலும் அறத்தினின்றும் அரசர்கள் வழுவமாட்டார்கள்.
“அறநெறி முதற்றே அரசன் கொற்றம்”
என்பது இதனை விளக்கம். பகை நேரினும் அப்பகையை நட்பாக்க முயல்வதேயன்றி அதனைப் பகைமையாக சாதிக்கமாட்டார்கள். பகையரசர்களைத் தோழர்களாகச் செய்து கொள்ளவே பெரிதும் முயல்வார்கள். அப்படிப் போர் நிகழினும் அறநெறி பிசகமாட்டார்கள். தமிழனுக்குக் கருணை யெண்ணமானது அவர்கள் தாயிடம் பால் ஊட்டும் பொழுதே உட்புகுந்த அரிய குணமாகும். தமிழன் உள்ளத்தில் கருணை வெள்ளமே ஊற்றெடுக்கும்.
போருக்குரிய காரணங்கள் பலவாக இருக்கும். அக்காலத்தில் ஒரு அரசன் பிறிதொரு அரசனின் மகளைக் கேட்டவிடத்து அவன் கொடுக்க மறுப்பின் இத்தகைய போர்கள் நடப்பது சகஜம். இங்ஙனம் பெண் மறுத்துக் கூறுதலை “மகண் மறுத்து மொழிதல்” என்று இலக்கியங்கள் கூறும். பாலை நிலத்து மறக்குடித் தலைவர்கள் பெரும்பாலும் முல்லை நிலத்து நிரைகளைக் கவர்ந்து வந்து கள்ளுக்கு விலையாகக் கொடுப்பர். ஒரு அரசன் வேற்று அரசனுடன் போர்புரிய முற்படின் முதலில் நிமித்;தம் பார்த்து தெய்வம் வணங்கியே செல்வான். எதிரி அரசனின் ஆநிரைகளையே அரசன் படைகள் முதலில் வரும். சில சமயம் கவரப்பட்ட ஆநிரைகளைச் சொந்த அரசன் மீட்டுச் செல்வதுமுண்டு. மக்கள் மாட்டையே செல்வமாகக் கொண்டிருந்த காலத்தில் இப்படிப் போர்முறை நடந்திருக்கலாம். அக்காலத்தில் வெட்சிப் பூச்சூடல், கரந்தைப் பூவணிதல், வாகைசூடல் முதலியன போர்க்குரிய சின்னங்களாகும்.; சில சின்னங்கள் போருக்கு ஆயத்தம் என்பதைக் குறிக்கும். சில போரைக் குறிக்கும். இன்னும் சில வெற்றியைக் குறிக்கும். இத்தகைய போர்களில் சிறந்த தொண்டாற்றும் வீரர்களுக்கு ஏனாதி, காவிதி போன்ற பட்டங்கள் வழங்கப்படுவதுடன் பரிசுகளும் அளிக்கப்படும். இவற்றைப் பெரும்பாணாற்றுப்;படை, சிலப்பதிகாரம் முதலியவற்றில் காணலாகும்.
இப்படி நடக்கும் யுத்தங்களில் தீரங்காட்டி உயிர்விடும் வீரர்களுக்கு வீரக்கல் நாட்டுதல் மரபு. இம்முறை இன்னும் இருந்து வருகிறது. இதனை ‘வீரக்கல் நாட்டல்’ என்று கூறுவர்.
“பட்டார் பெயரும் ஆற்றலுமெழுதி
நட்ட கல்ல மூது}ர் நத்தமும்”
சேரமான் பெருமான்
என்று கூறிப் போந்தனர். இன்னும் சிலப்பதிகாரத்திலும் கல்நாட்டும் வழக்கம் பற்றிப் பரக்கக்காணலாகும்.
தமிழர்கள் கடற் சண்டைகளிலும் சிறந்து விளங்கினர். அந்நிய நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று வெற்றியும் கொண்டனர். வர்த்தக காலங்களில் மரக்கலங்களைக் கொள்ளையடிக்க வரும் கடற் கொள்ளைக்காரருடன் எதிர்த்துத் தங்களைப் பாதுகாப்பதற்கு தனவணிகர் பாரிய கடற்படைகளை வைத்திருந்தனர். இவைபற்றி புறநானு}று, மணிமேகலை முதலியவற்றில் காணலாகும். தமிழ்நாட்டு மன்னர்கள் கடற்போர் புரிந்தனர் என்பதற்குப் பல ஆதாரங்களுண்டு.
ஒரு அரசன் பிறிதொரு அரசனுக்கிருக்கும் பெருமையையும் புகழையும் கண்டு பொறாமை மேலீட்டால் யுத்தம் செய்தலும் உண்டு. மண்ணாசை கொண்டும் மன்னர்கள் யுத்தம் செய்வார்கள். திறை கொடுக்க மறுக்கும் சிற்றரசர்களுக்கும் மன்னர்களுக்கும் யுத்தம் நடப்பதும் வழக்கம். இப்படிப்பட்ட ஆபத்துக் காலங்களிலும் அரசினை தளம்பாது பாதுகாத்தலே மன்னன் கடமை.
அரசினை நடத்துவதற்குப் பணம் வேண்டும்;. அப்பணம் முழுவதும் வரிமூலம் மக்களிடமிருந்தே பெற்று நகரங்களை நன்முறையில் மன்னர்கள் ஆண்டு வந்தனர். அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கும், தமிழ் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கும் சங்க வரிகள் விதிக்கப்பட்டன. சிற்றரசர்கள் திறைப்பணங்கள் கொடுப்பார்கள். குடிமக்கள் தாம் நாட்டில் இருந்து அடையும் ஊதியத்தில் இருந்து தமது வரிப் பணங்களைச் செலுத்துவார்கள். இவ்விதம் வரும் வருமானமே நாட்டிற்கு உதவியது. பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகழாம் முதலிய நு}ல்களில் இவை காணப்படுகின்றன. அரசன் நல்ல ஆட்சியைச் செலுத்துவதற்கு சான்றோர் உறுதணையாக இருப்பர். இச்சான்றோர் அரசர்க்கு வேண்டும் போதெல்லாம் அறிவுறுத்தி தேசத்தை நன்னிலையில் விளங்க வைப்பார்கள்.
பண்டைக்காலத் தமிழ் மக்கள் நல்லாட்சியில் நலம்பெற வாழ்ந்தனர். இன்றைய உலகில் கொடுங்கோனாட்சியோ அன்றி அதர்ம அடக்க முறைகளோ அல்லது சுதந்திரப் பறிப்போ அக்காலத்தில் இல்லை. மக்களுக்காகவே அரசு இருந்தது. அன்றைய தமிழ் மக்கள் உலகிற்கு வழிகாட்டிகளாக விளங்கினர். அன்னார் செல்வம் வாணிபத்தில் மிகவுந் தங்கியிருந்தது. நாட்டிற்கு நலனைக் கொடுப்பது வாணிபமே. இன்றைய உலகிலும் ஒவ்வொரு நாட்டையும் செல்வத்தில் திகழச் செய்வது வாணிபம் என்பதை மறுக்க முடியாது.
No comments:
Post a Comment