Monday, 19 September 2016

ஆதித்தமிழ் வரலாறு-2

ஆராய்ச்சியும் முத்தமிழ்நாடும்.
உலகில் பல பிரிவுகளிலும் ஆராய்ச்சிகள் நடத்தி வந்தோர் அவ்வவ்விடங்களைப்பற்றி எழுதிய நு}ல்களை ஆராயுமிடத்து எல்லா இடங்களிலும் தமிழர் தொடர்பு காணக்கூடியதாக இருக்கின்றது. குமரிக்கண்டமே உலக மக்கள் உற்பத்தியிடத்தின் மத்திய இடம் என்றும் ஆண்டு பேசப்பட்டுவந்த தமிழ் மொழியே அவர்களது மொழியென்றும் அதனால் ஆங்கு வாழ்ந்தோர் தமிழ் மக்களே என்றும் உறுதியாக இவ்வாராய்ச்சிகளால் அறியக் கிடக்கின்றன.

தற்பொழுதுள்ள குமரிமுனைக்குத் தெற்கே அலைகொழிக்கும் இந்து சமுத்திரத்தினு}டே பெரிய நிலப்பரப்பிருந்ததென ஆங்கில பௌதிக நு}ல் வல்லார் கூறுவர். தமிழ்ப் புராண வரலாறுகளும். இலங்கையின் சரித்திரமும், தமிழ் இலக்கியங்களும் கர்ன பரம்பரைக் கதைகளும் இக்கூற்றிற்கு ஆதாரமாகின்றன. வீரமNகுந்திரபுரி என்னும் சூரபன்மன் தலைநகர் இருந்த இடமே பழைய இலங்கை யென்றும் அது மிகப் பரந்த தேசமாக இருந்ததென்றும் தெரிகிறது. இராவணன் காலத்திய இலங்கைக்கூடாக மத்திய ரேகை செல்வதாக இந்திய வான சாஸ்திரிகள் பகருகின்றனர். இந்த இராவணன் காலத்திய இலங்கையின் கீழைப் பகுதியே சுமாத்திரா ஜாவாவாக இருக்கலாமெனக் கருதப்படுகிறது. ‘இராசவளி’ என்னும் சிங்கள நு}லில் கடல் கொள்ளப்பட்ட இரவணன் இலங்கைபற்றிக் கூறப்படுவதாகத் தெரிகிறது. “நெடியோன் குன்றமும் தெடியேள்பௌவமும்” என்னும் சிலப்பதிகார செய்யுளடிக்கு உரை கூறுமிடத்து குமரிமுனைக்குத் தெற்கே நாற்பத்தொன்பது நாடுகள் இருந்ததாக அடியார்க்கு நல்லார் கூறுகின்றார். செங்கோன்தரைச் செலவு என்னும் நு}லில் அடியார்க்கு நல்லாருரையில் காணப்படாத சில இடப் பெயர்கள் காணப்படுகின்றன. புற நானு}ற்றில் பஃறுளி ஆற்றைப்பற்றி சொல்லப்படுகிறது.

ஆதித்தமிழ் அகத்தில் மனு என்னும் அரசனின் மகளான ஈழம் என்பவளுக்கு குமரி என்றும் ஒரு பெயர் இருந்ததாகத் தெரிகிறது. அவள் அரசாண்ட இடத்திற்கு குமரிக்கண்டமெனப் பெயர் வந்தது. கன்னியாகவே இருந்ததால் இப்பிரதேசத்திற்கும் கன்னியா குமரிக்கண்டம் என்னும் பெயர் வழங்கப்பட்டது. குமரிக் கண்டத்திலே சேர, சோழ, பாண்டிய நாடுகளும் இலங்கைபோன்ற நாடுகளுமாக நாற்பத்தொன்பது தேசங்கள் இருந்தன. பிற்காலத்தில் ஏற்பட்ட ஜலப் பிரளயத்தால் பெரும் பகுதியான நிலப்பரப்பு நீர்ப்பரப்பாக மாறிவிட்டது. பழைய தமிழ் நு}ல்களும் இப்பிரளயத்தில் அழிந்தொழிந்தன. ஜலம் கொள்ளாதொழிந்த பிரதேசம் பரதகண்டமாகவும் இலங்கைத் தீவாகவும் பிரிந்தன. இந்த இடங்களிலே வாழ்ந்த தமிழ் மக்களைப் பரதர், நாகர். இயக்கர். சித்தர் எனப் பல திறப்படுத்தி அழைத்தனர்.

இலங்கையும் அன்றைய குமரிக்கண்டத்தின் நாடாதலின் அதனை ஈழம் என்னும் குமரி அரசாண்டனள். இதனால் இலங்கைக்கு ஈழம் என்னும் பெயரும் சூட்டப்பட்டது. தமிழ்த்தேசம், குமரி நாடு, குபேர நாடு, இராவணன் நாடு, நாகதீவு, இயக்கநாடு எனப் பல பெயர்களும் இலங்கைக்கு இருந்தன. அறிவிற் சிறந்த தமிழ் மக்களையே இயக்கர், நாகர் என அழைத்தனர். இலங்கையை அரசாண்ட சுகேசன் என்னும் அரசன் சந்திரஞாலம் என்னும் விமானத்தில் போக்குவரவு செய்தான். இவற்றினாலே அன்றைய தமிழ் நாட்டின் பரப்பு இன்று குறைந்துள்ளதென்பது வெள்ளிடைமலை.

பழைய தமிழ் நாட்டில் கடலில் மூழ்கிய பகுதிபோக இன்று நிலப்பரப்பாக இருக்கும் பகுதிபற்றி மேற் கூறியுள்ளோம். இங்கு ஆராய்ச்சிகள் நடத்தியதன்பயனாக கிடைக்கப்பெற்றுள்ள பல வகைச் சாதனங்களும் தமிழ் மக்களையே குறிக்கின்றன. ஆகவே தமிழ்ச் சாகியத்தாரே இங்கு வாழ்ந்துள்ளனரென்பது அங்கை நெல்லிக் கனியாகின்றது.

“குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனும் நான் கெல்லையின் இருந்த தமிழ்”

என்னும் கூற்றால் கடல்கொண்ட நாடு போக எஞ்சியிருந்த தமிழ்நாடு இன்றைய இந்தியநாடு முழுமையுமென்பது விளங்குகின்றது. 

பண்டைய நாகரிக உற்பத்தி நாடுகளென்று கொண்டாடப்பெறும் பாபிலோனியா முதலிய இடங்களிலும் எகிப்து, கிரேக்கநாடு, உரோமபுரி முதலிய இடங்களிலும், மெக்ஸிக்கோ முதலிய அமெரிக்க நாடுகளிலும் சீனம் போன்ற தேசங்களிலும நடத்திய ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை உற்று நோக்குமிடத்து ஆங்குக் காணப்படுவதென்னை? பண்டைய உலகில் வாழ்ந்தோர் தமிழ்மக்களில் இருந்து பிரிந்தவர்கள் என்னும் உண்மை தெளிவாகின்றது.

கடல்கொண்ட தமிழ்நாடுபற்றி அதிகம் அறியக்கூடியதாக தமிழ் நு}ல்களில் இன்று இல்லை. பழைய தமிழ் நு}ல்கள் ஜலப்பிரளயத்தில் மறைந்தொழிந்ததால் இன்று அக்கால சரித்திரங்களை அறிய முடியவில்லை. ஜலப் பிரளயத்தின் பின் இருந்த தமிழ் நாட்டை முப்பிரிவுகளாக வகுத்திருந்தனர். இந்நாடுகளைப் பரிமேலழகர் திருக்குறள் குடிமை அத்தியாயத்தில் வரும் செய்யுளில் உள்ள பழங்குடி என்பதற்கு உரை கூறுமிடத்த விளக்குகின்றார்.

“வழங்குவதுள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற்றலைப் பிதலின்று”

இந்தத் திருக்குறளுக்கு அவர் கூறும் உரை கொண்டும் ஏனைய நு}ல்களில் கிடைக்கும் ஆதாரங்கள் கொண்டும் நோக்குமிடத்துச் சேர, சோழ, பாண்டிய நாடுகள் மூன்றும் பழம் நாடுகள் ஆகின்றன. இம் முப்பிரிவுகளையும் ஆண்டோர் பழம் மக்களாதலின் அன்னார் காலம் வரையறுக்க முடியாது.

சேர, சோழ, பாண்டிய நாடுகளில் வழங்கிவந்த மொழி தமிழ் மொழியே. இம் மொழியொன்றே இத்தமிழ் நாட்டின் பெருமைக்குப் போதியதாகும். இம் மூன்று நாடுகளிலும் பாண்டி நாடே தமிழுக்குப் போதிய ஊக்கமளித்ததென நு}ல்கள் கூறா நிற்கும்.

பாண்டியநாடு சோழ தேசத்திற்குத் தென்மேற்கில் கன்னியாகுமரி வரையில் உள்ள தேசமாகும். இதனை அக்காலத்தில் ‘மாறதேசம்’ என்றும் ‘மாறன்பதி’ என்றும் வழங்கி வந்தனர். பாண்டியர் அரசியற்றினமையின் இதற்குப் பாண்டிய நாடென்னும் பெயர் உண்டாயிற்று. தென் மதுரையும், கன்னியாகுமரியின் தென்பால் விசாலித்து வளர்ந்தோங்கிய பூமிப்பரப்பும், அப்பூமிப் பிரதேசத்திற்கு நிர்ப்பாய்ச்சிய பஃறுளியாறும் பண்டோருநாட் பெருகிய கடற்பெருக்கில் மறைந்துவிட்டன. சப்த நதிகளில் ஒன்றாகும் குமரி தீர்த்தமும் இதில் அமிழ்ந்தி மறைந்தது. கடல் கொண்ட தமிழ் நாடுபற்றி சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் நாடு காண் காதையில்

“வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள”

எனக் கூறுகின்றார். இஃது இன்றைய ஆராய்ச்சியாளர் கூறும் குமரிக்கண்டத்திற்குப் போதிய சான்றாகும்.

தென்பகுதி கடல்கொண்ட பின்னர் கபாடபுரம் இராசதானியாக ஏற்ப்பட்டது. பாண்டியமன்னர் இக்கடற் பெருக்கால் இழந்த நிலப்பகுதிக்கு ஈடாக சோழநாட்டில் இருந்தும், சேரநாட்டில் இருந்தும் சில பகுதிகளைச் சேர்த்துக்கொண்டனர். இதனை அடியார்க்கு நல்லாரின் “அங்ஙனமாய நிலக்குறைக்குச் சோழ நாட்டெல்லையிலே முத்து}ர்க் கூற்றமும் சேரமா நாட்டுக் குன்று}ர்க் கூற்றமும் என்னுமிவற்றினை ......” என்னுங் கூற்று தெளிவாக்குகின்றது. கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆளும் காலத்தில் அதுவும் கடற்பெருக்கில் அமிழ்ந்தி மறைய உத்தரமதுரை இராசதானியாகக் கொள்ளப்பட்டது. இந்நகரின் பண்டைச் சிறப்புகளைப் பரிபாடல், மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம், கல்லாடம் முதலிய நு}ல்கள் வியந்து கூறுகின்றன.

பாண்டிய நாட்டில் வைகை ஆறு நீர் வளத்தால் சிறந்து செல்வத்தைப் பெருக்கியது. பண்டைக் காலத்தில் வைகை ஆறு மிகவும் ஆளமுடையதாகவும், வற்றாத நீர்ப் பெருக்குடையதாகவும் இருந்தது. வைகை ஆற்றைக் கடத்தற்கு குதிரைமுகப் படகும், யானைமுகப் படகும், சிங்கமுகப் படகும், ஆங்காங்கே துறைகளில் காணப்பட்டன என்று அவைகளில் மக்கள் அவரவர்கள் தகுதிக்கும் செல்வத்திற்கும் ஏற்ப படகுகளில் ஏறி ஆற்றைக் கடந்தனரென்றும் அறியப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் வைகை ஆற்றைப்பற்றி ஆசிரியர் கூறுமிடத்து,

“உலகு புரந்து}ட்டும் உயர் பேர் ஒழுக்கத்தையும்
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
வையை யென்ற பொய்யாக் கலக்கொடி”

எனப் புகழ்ந்துரைக்கின்றார். பாண்டிய நாட்டில் வைகையே நீர் வளத்தினை மிகைப்படுத்தியது.

சோழகுலத்தரசர்க்குரிய தேசம் சோழம் அல்லது சோழமண்டலம் என்ற அழைக்கப்பட்டது. காவிரியாம் பொன்னி நதி பாயுநாடாதலின் இதனை ‘நீர்மலிவான்’ என்றும் ‘புனல் நாடு’ என்றும் கூறுவர். ஆதியில் இதன் தலைநகர் உறையூர். அதன் பின்னர் காவிரிம்பூம் பட்டினம் அல்லது புகார் என்னும் நகரம் தலைநகராக விளங்கியது. இத்தலத்திற்குப் பல பெயர்கள் சூட்டப் பெற்றிருந்தன. கவேரன் என்னும் மன்னனுடன் தொடர்பு கொண்டிருந்தபடியால் பொன்னி நதி காவேரி என்று அழைக்கப்பட்டு வந்தது.

‘சோழநாடு சோறுடைத்து”

என்னும் ஒளவைப் பிராட்டியார் கூற்றினால் அந்நாடு வளம் பொருந்தியிருந்ததென்பது தெளிவாகும்.

சேரநாடு என்பது இக்காலத்திய திருவனந்தபுரம், கொச்சி. மலையாளம், கோயம்புத்து}ர் முதலிய இடங்களும் சேலத்தின் ஒரு பகுதியும் ஆகும். இந்நாட்டின் தலைநகரம் வஞ்சி என்றும் பலர் புகழ்ந்து கூறியுள்ளனர். புகழ்பெற்ற சிலப்பதிகாரத்தின் தந்தையும் இச் சேரர் குலக்கொழுந்தே.

சேரநாட்டில் மலைவளமும் அம்மலையினின்றும் இழிந்த அருவியின் வளமும் நீர்நிறைந்த பெரியாறு என்னும் பெருநதியும் பொருனை என்னும் பொய்யா நதியும் விளங்கித் தோன்றின.

“மூதிர் பூம்பரப்பின் ஒருபுனல் தனித்து
மதுகரம் ஞிமிளொடு வண்டினம் பாட
நெடியோன் மார்பில் ஆரம்போன்று
பெருமலை விலங்கிய பேரியாற்று அடைகரை”

எனச் சிலப்பதிகார ஆசிரியர் கூறுவதால் இவ்வாற்றின் வளமும் சிறப்பும் ஒருவாறு அறியப்படும். திருநெல்வேலி நாட்டில் நலம் பெருக்கும் பொருனை யென்னும்பெயர் பெற்ற தம்பிரவர்ணியாறு சேரநாட்டைச் சேர்ந்தது. இவ்வாற்று வளத்தால் சேரநாட்டில் பயிர்த்தொழில் மிக மேம்பாடடைந்தது. 

இந்த முத்தமிழ் நாடுகளிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் வாழ்;ந்த இடங்களை ஐத்திறப்படுத்தியிருந்தனர். இவ்வைந்து நிலங்களைப்பற்றியும் அவற்றில் வாழ்ந்த மக்களைப்பற்றியும் நாம் அறிதல் முக்கியமாகும்.

No comments:

Post a Comment